டெங்கு வைரஸை எதிர்த்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்பு!
இன்றய காலகட்டமானது கோவிட்-19 தொற்று நோயுடன் எம்மை புதைத்திருந்தாலும் டெங்கு நோயானது வெப்பமண்டல மட்டும் இடைவெப்பமண்டல நாடுகளில் தீவிரமாகப்பரவி வரும் நோய்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த தசாப்தத்தில் டெங்கு உயிர் கொல்லி நோயானது பல்லாயிரம் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது. அத்துடன் பல மில்லியன் மக்கள் டெங்கு நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றபோதிலும் இந்த உயிர்கொல்லி நோயான டெங்குவிற்கு சவால்விடும் முகமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியரான ரணில் தசநாயனக்க தலைமையிலான ஒரு ஆராய்யச்சி குழு மற்றும் களனி பல்கலைக்கழக மூலக்கூற்று மருத்துவ பீடத்தை சேர்ந்த பேராசிரியர் நிலிமி குணவர்தனவுடன் சேந்து ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சி குழு
Prof. Ranil Dassanayake
Principal supervisor
Department of Chemistry, Faculty of Science
University of Colombo
Prof. Nilmini Gunawardena
Co-supervisor
Molecular Medicine Unit, Faculty of Medicine
University of Kelaniya
Mr. Kalindu Ramyasoma
Ph.D. Student
University of Colombo
டெங்கு நோயானது நுளம்பினால் பரவும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். மிகவும் சிக்கலான விடயமென்னவென்றால் இந்த நோய் தொற்றின் ஆரம்ப கட்டங்களில் எந்தவிதமான நோய் அறிகுறிகளும் தென்படாது. டெங்கு நோயின் இறுதிக்கட்டங்களில் தீவிர காய்ச்சல் மற்றும் இரத்த கசிவுகளை ஏற்படுத்தும் இவைகளால் உடல் உறுப்பு இழப்பு ,இறப்பு கூட ஏற்படலாம் டெங்கு நோயை ஏற்படுத்தும் வைரசானது Filaviviridae குடும்பத்தை சேர்ந்தது.
நான்கு விதமான அனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட நுளம்பு வகைகள் இந்த நோயை பரப்புவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவதானிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் இந்த நான்கு வகையான நுளம்புகளில் ஒரு வகை மட்டுமே வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மையை வழங்குமென்று நம்பப்படுகின்றது. ஏனைய மூன்று வகைகளும் டெங்குநோய் தொற்றும் வாய்ப்பையே அதிகரிக்கின்றன. Aedes aegypti எனும் பெண் நுளம்பபே டெங்கு பரவுதலுக்கு அதிகமான பங்களிப்பை செய்கின்றது. எதிர்பாராதவிதமாக நோயின் உக்கிரத்தன்மையை கருத்திற்கொள்வோமேயானால் இன்னும் முறையான சிகிசிச்சை முறை டெங்குவிற்கு கண்டறியப்படவில்லை. எனவே முடிந்தவரை நோய் பரவுதலை தவிடுப்பது மிக முக்கியமான விடயமொன்றாகும். அந்தவகையில் டெங்கு நோயைப் பரப்பும் காவிகளை அழிப்பதே எம்மால் மேற்கொள்ளப்படக்கூடிய கொள்ளப்படக்கூடிய அதி கூடிய முயற்சி ஆகும். அம்முயற்சியில் சில பின்வருமாறு பூச்சிக்கொல்லி வழியாக கட்டுப்படுத்தல்,மலட்டு தன்மையுள்ள காவிகள வளர்ப்பது,காவிகளின்இனப்பெருக்கத்தை தடுப்பது. ஆகினும் மேலே தரப்பட்ட முயற்சிகள் எமக்கு ஓரு குறிப்பிட அளவு வெற்றியையே பெற்றுத்தந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட ஆராய்ச்ச்சியானது கலாநிதி படிப்பின் ஒரு அங்கமாக திரு கலிண்டு ரம்யாசோம என்பவரால் மேட்கொள்ளப்பட்டது. இவ் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் யாதெனில் RNA எனும் நியூக்ளிக் அமிலம் குறுக்கீடு அடிப்படையிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டெங்கு வைரஸ் எதிர்ப்பு திறனுள்ள மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளை உருவாக்குதலாகும். இந்த திட்டத்தின் மூலம் மைக்ரோ இன்ஜெக்டேஷன் எனும் மரபணுமாற்றும் நுட்பத்தை பயன்படுத்தி நுளம்பு முட்டைகள் வழியாக அவற்றின் மரபணுவுக்குள் உயிரியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட டெங்கு எதிர்ப்பு மரபணுவை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி உள்ளனர்.
மரபணுமாற்றம் செய்யப்படட நுளம்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வேறு இனத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட வெளி மரபணுவை டெங்கு வைரஸை பரப்பும் நுளம்பின் மரபணுத்தொகுதிக்குள் உணவின் மூலம் உடலுக்குள் நுழையும் போது மட்டுமே வெளிப்படுத்தப்படும் இக்கண்டுபிடிப்பில் மிகவும் சுவாரசியமான விடயம் யாதெனில் டெங்கு மரபணுவின் வளர்ச்சியின் போது ஆராய்ச்சியாளர்கள் இந்த குறிப்பிடட மரபணுவை மற்றைய மரபணுவுடன் இணைத்து உள்ளனர். அந்தஇணைக்கப்பட்ட மரபணுவானது மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளின் கண்கள் சிவப்பு ஒளிரும் புரதந்தை உருவாக்கும். .இதன் மூலம் மரபணுமாற்றம் செய்யாத நுளம்புகளிலிருந்து மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளை பிரித்து அறியக்கூடியதாக இருக்கும்.
பரிசோதனை முடிவுகளின் தீவிர விசாரணைகளின் பின்னர் ஆராய்ச்சியாளர்களால் மரபணுமாற்றம் செய்யப்படநுளம்புகளில் multi-miRshRNAமூலக்கூறுகள் si-RNA ஆக மாற்றப்பட்டிருப்பதனால் இவ்வ் si-RNA மூலக்கூறுகள் டெங்கு வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. இதனால் முற்குறிப்பிடப்பட்ட நான்கு வகையான டெங்கு பரப்பும் நுளம்புகளில் மேலும் இரு வகையான நுளம்புகளை டெங்கு வைரஸ்க்கு எதிராக எதிர்த்து போராடும் ஆற்றலை வழங்குகின்றது. இந்த ஆராய்ச்சியின் மூலம் உலகில் பல வகையான டெங்கு வைரஸ் எதிர்ப்பு நுளம்புகள் இலங்கையில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது இலங்கையின் விஞ்ஞான தொழில்நுட்ட்பத்தில் ஒரு மைல் கல் என்று குறிப்பிட்டால் மிகையாகாது.
ஆராய்ச்சி சோதனை
இக்கண்டுபிடிப்பானது உலகளவில் டெங்கு உயிர் கொல்லி நோயை இல்லாதொழிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. முக்கியமாக, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற நோய்களைப் பரப்புவதற்கு டெங்கு காவி பொறுப்பேற்றுள்ளதால், அந்த நோய்களுக்கும் எதிராகப் போராடுவதற்கு இது ஒரு நம்பிக்கைக்குரிய நுட்பமாகும். இந்த புரட்சிகர பரிசோதனையின் பணிகள் மதிப்புமிக்க மதிப்பாய்வு செய்யப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி இதழ்கள், RNA உயிரியல் மற்றும் உயிரின ஆராய்ச்சி ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன மேலும் இந்த சிறப்பு மிக்க ஆராய்ச்சிக்கு தேசிய ஆராய்ச்சி மையம் பூரண நிதி அளித்தது என்பதை கண்டிப்பாக கூறியாகவேண்டும் இந்தக்கண்டுபிடிப்பானது உலகளாவிய ரீதியில் காவிகள் மூலம் பரவும் பல நோய்களை இல்லாதொழிக்க உதவும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .
இலங்கையர்களாகிய நாம் நம்மிடம் உள்ள அறிவுசார் வளங்களைப் பற்றி பெருமிதம் கொள்ளவேண்டும். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட ஆராய்ச்சி குழுவினரின் வெற்றிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Resource and image courtesy: https://cmb.ac.lk/transgenic-mosquito-resistant/
Written by: Samuel Thevaruban Jegapragashan