உலகம் முழுவதும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் உயிரினங்களுக்குள் இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹனுமன் உப்புக்கொத்தி (ஹனுமன் ப்ளோவர்) உம் இணைகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் முனைவர் சம்பத் செனவிரத்ன அவர்களின் மேற்பார்வையில், ஆராய்ச்சி மாணவரான ஜூட் ஜனித்த நிரோஷான் அவர்கள், சீனாவின் Sun Yat-sen பல்கலைக்கழகத்தின், சூழலியல் கல்லூரியின் முனைவர் Yang Liu அவர்களுடன் இணைந்து ஒரு ஆராய்ச்சிக்குழுவினால் இக்கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பபட்டுள்ளது. இப்பறவை மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரையிலான பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறு சிறு மண் தீவுகளிலும், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் உலர் வலய தாழ்நிலங்களிலும் காணப்படுகிறது. இப்புது இனத்தின் அறிவியல் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும். அத்துடன் இப்பறவையினம் ஆபத்துக்கு இலக்காகிய இனமாக பிரகடனப்படுத்த வாய்ப்புக்கள் உண்டு.
எனவே, உயிர்பல்வகைமையை காப்பு செய்யும் நடவடிக்கையில் புது இனங்களை கண்டுபிடிப்பதன் முக்கியத்துவம் இன்றியமையாதது. இப்பூமியில் 15 மில்லியன் உயிரினங்கள் வாழினும், 2 மில்லியன் உயிரினங்களே அறிவியலின் பார்வையில் எட்டியுள்ளது. எனவே, கொழும்பு பல்கலைக்கழகம் , முனைவர் சம்பத் செனவிரத்ன அவர்கள் மற்றும் ஜூட் ஜனித்த நிரோஷான் அவர்களின் இவ்வரிய கண்டுபிடிப்பையிட்டு பெருமை கொள்கிறது.