Menu Close

இலங்கையின் ஏற்றுமதி விவசாயத்தில் பசுமையான எதிர்காலத்தினை நோக்கி

நாகரீக வளர்சி காரணமாக ஏற்ப்பட்ட முன்னேற்றத்தினால் நிகழ்த்ப்பட்ட பல சாதனைகள் மனிதனை புவியில் ஆதிக்கம் மிக்க உயிரினமாக மாற்றியது. இருப்பினும் மனித வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த கைத்தொழில் புரட்சியின் ஆரம்பத்துடன் , அபிவிருத்தியின் சில பாதகமான விளைவுகளும்;  சுற்றாடலுக்கு விரும்பத்தகாத பதார்த்தங்களின் பயன்பாடும் மனிதனால் கொண்டுவரப்பட்டன. பச்சை வீட்டு வாயுக்களின் ()  மூலம் மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம்  அவற்றுள் ஒன்றாவதுடன் அது தற்போது பவியிலேயே மிகவும் சவாலான சூழலியல் பிரச்சினையாக மாறியுள்ளது. மானுடவியலாலான காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பு செலுத்தும் காரணிகள் பல இருப்பினும் விவசாயம் மற்றும் விவசாயத்தினை மையமாகக்கொண்ட தொழில்களும் அவற்றில் முக்கியமானவை

புரதான காலத்தில் இருந்தே இலங்கை ஒரு விவசாய நாடாக காணப்படுகின்றது. மேலும் காலனித்துவக் காலத்தில் பல்வேறுபட்ட வணிக மதிப்புள்ள பயிர்கள் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுள் தேயிலை (Camellia sinensis) மற்றும் இறப்பர் (Hevea brasiliensis)    என்பன தற்பொழுதும் இலங்கைக்கு கணிசமானளவு அந்நியச்செலாவணியை பெற்றுத்தரும் பிரதான இரு ஏற்றுமதிப் பயிர்களாகும். அவற்றின் வணிக மதிப்புக் காரணமாக தேயிலை, இறப்பர் இரண்டும் பெரியளவில் பயிரிடப்படுகின்றன. எவ்வாறாயினும் இந்த பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் புதைபடிம எரிபொருட்கள் மற்றும் மின்சாரம் காரணமாக கணிசமான அளவான பச்சை வீட்டு வாயுக்கள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றன. தற்பொழுது உலகம் ஒரு நிலையான நுகர்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் காரணமாக உலகச் சந்தையில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள பச்சை வீட்டுவாயுக்களின் வெளியீட்டினை குறைப்பது அவசியமாகும். அதன் பொருட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் எரந்திட்டியே லொகுபிட்டிய அவர்களின் மேற்பார்வையின் கீழ் இறப்பர் மற்றும் தேயிலை கைத்தொழில் துறைகளின் மூலம் உமிழப்படும் பச்சை வீட்டு வாயுக்களின் அளவீடுகளை குறைப்பது தொடர்பில் டாக்டர்.ஜெகத்தேவ விதானகம அவர்களால் ஒரு  (PhD) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பேராசிரியர் எரந்திட்டியே லொகுபிட்டிய
விலங்கியல் மற்றும்
சூழலியல் விஞ்ஞானத்துறை விஞ்ஞானபீடம

டாக்டர்.ஜெகத்தேவ விதானகம விலங்கியல் மற்றும்
சூழலியல் விஞ்ஞானத்துறை விஞ்ஞானபீடம

இந்த ஆய்வில் இவ்விரண்டு தொழற்துறைகளில் இருந்து வெளிவிடப்படு;ம் பச்சை வீட்டு வாயுக்களை  அளவிடுவதற்கு உற்ப்பத்தி வாழ்க்கைச்சக்கர மதிப்பீடு (Product Life Cycle Assessment (LCA))எனும் முறையினைக் கையாண்டார். இவ்வாறான கைத்தொழில் செயல்முறைகளின் போது சூழலியல் தாக்கத்தினை மதிப்பிடுவதற்கான சிறந்த அணுகுமுறையாக LCA கருதப்படுகின்றது. இங்கு தயாரிப்புப் பொருட்கள் சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கமானது அவற்றின் ஆயட்காலத்தின் பாவனையின் போதான (mid-point) மற்றும் இறுதிக்காலத்தின் போதான (end-point) தாக்கங்கள் என வரையறுக்கலாம். இந்த ஆய்வில் ஆதியில் இருந்து அந்தம் வரையிலான கழிவு வெளியேற்றங்கள் அதாவது ஆரம்பநிலை உற்பத்தியில் இருந்து இறுதித் தயாரிப்புப் பொருள் வரை தொழிற்சாலைகளினால் உமிழப்படு;ம் பச்சை வீட்டு வாயுக்கள் பற்றி கவனத்திற்கொள்ளப்படுகின்றது. நீண்ட காலத்திலிருந்தே இலங்கை தேயிலை உற்பத்திக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருப்பதுடன் “Ceylon Tea” எனும் பிரபல்யமான வணிகப் பெயரில் தனது உற்பத்திகளை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றது. இலங்கையில் தேயிலை 14 மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன. மேலும் இத் தேயிலைத் தோட்டங்கள் அரச பெருந்தோட்ட நிறுவனங்கள்இ தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள்இ சிறியளவிலான  மற்றும் சுய முயற்சியாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வில் தேயிலைப் பெருந்தோட்ட நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் தேயிலைத் தோட்டங்கள் பற்றி மட்டுமே இங்கு கருத்திற்கொள்ளப்படுகின்றது. தேயிலை மற்றும் இவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகளின் போது நுகரப்படும் சக்தி வளங்கள் மற்றும் உமிழப்படும் பச்சை வீட்டு வாயு விளைவுகளுடன் தொடர்புடைய தகவல்கள் பின்வருமாறு.

Table 1: Sources of energy and related activities in phases of life cycle

வாழ்க்கைச்சுழற்சியின் கட்டம் சக்தி வளங்கள் தொடர்புடைய செயற்பாடுகள்
தேயிலை நடுகை நுகரப்பட்ட மின்சக்தி எஸ்டேட் அலுவலக , பங்கலா மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளிற்கு
டீசல் மற்றும் பெற்றோல் நிலத்தினை பண்படுத்தல் மற்றும் தேயிலை கொழுந்து சேகரித்தல்
பச்சை தேயிலைகளினை கொண்டுசெல்லல் டீசல் பச்சை தேயிலைகளினை தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லல்
தேயிலை பதப்படுத்தல் மின்சக்தி இயந்திரங்களின் பயன்பாடு
டீசல் உயிர்த்திணிவை கொண்டுசெல்ல மற்றும் காத்திருப்பு மின் பிறப்பாக்கி (standby generator)
உயிர்த்திணிவு வெப்பசக்தி உற்பத்தி

2012 (2012 – 2014) முதல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக தேயிலை வளரும் பகுதிகளில் அதிக, நடுத்தர வளர்ச்சி , குறைந்த வளர்ச்சி மற்றும் ஊவா பகுதியில் பச்சை வீட்டுவிளைவு வாயு உமிழ்வுகள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்பட்டன. இலங்கை உயர்ரக இயற்கை இறப்பர் மற்றும் பெறுமதி  சேர்க்கப்பட்ட இறப்பர் பொருட்களை உற்பத்தி செய்வதில் தனக்கென ஒரு அங்கிகாரத்தினைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வில் பின்வரும் வகையான இறப்பர் உற்பத்திப் பொருட்கள் பற்றி கருத்திற்கொள்ளப்படுகின்றது.

  • மூல இறப்பர் பொருட்கள்
    • மெல்லிய இறப்பர் மற்றும் விலா வடிவ புகையூட்டிய தாள்(;(Crepe Rubber and Ribbed Smoked Sheet (RSS))
    • மையநீக்குஃசெறிவாக்கப்பட்ட மரப்பால் (Centrifuged/Concentrated Latex)
    • தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக்கப்பட்ட இறப்பர் ; ( Technically Specialized Rubber (TSR))
  • பெறுமதி சேர் இறப்பர் பொருட்கள்
    • செறிவாக்கப்பட்ட மரப்பாலை அடிப்படையாக கொண்ட தயாரிப்புகள்;(Concentrated Latex Based products)
    • காய்ந்த இறப்பரை அடிப்படையாகக்கொண்ட தயாரிப்புகள்;(Dry Rubber Based products)

இங்கு தோட்ட கம்பனிகளால் முகாமைத்துவம் செய்யப்படும் இறப்பர் பயிர்ச்செய்கைஇ இறப்பர் பால் கொண்டுசெல்லல்இ நடுத்தர இறப்பர் உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பெறுமதி சேர் இறப்பர் பொருட்களின் உற்பத்தி என்பன பற்றி கருத்திற்கொள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு படிமுறையிலும் பயன்படுத்தப்பட்ட சக்தி வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் வருமாறு.

Table 2: Energy sources and related activities in phases of life cycle

வாழ்க்கைச்சுழற்சியின் கட்டம் சக்தி வளங்கள் தொடர்புடைய செயற்பாடுகள்
இறப்பர் நடுகை டீசல் மற்றும் பெற்றோல் பிரதானமாக மரப்பாலை பிரதான தாங்கிக்கு சேகரித்தலும் ஏனைய போக்குவரத்தும்
மின்சக்தி எஸ்டேட் அலுவலக , பங்கலா
மரப்பாலினை கொண்டுசெல்லல் டீசல் பாலை இறப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லல்
செயன்முறை மின்சக்தி பதப்படுத்தும் ஆலையில்
டீசல் காத்திருப்பு மின் பிறப்பாக்கி (standby generator)
உயிர்த்திணிவு வெப்ப சக்தியை பிறப்பித்தற்காக
பெறுமதிசேர் இறப்பர் பொருள் தயாரிப்பு மின்சக்தி பொருட்களை கையாலல்
டீசல் உள்ளக போக்குவரத்து காத்திருப்பு மின் பிறப்பாக்கி (standby generator)) வெப்ப சக்தி உயிர்த்திணிவை கொண்டுசெல்ல
எரிபொருள் எண்ணெய் வெப்ப சக்தியை பிறப்பித்தல்

2012 (2012-2014)  முதல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் களுத்துறை, கொழும்பு, பதுளை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வில் தேயிலைக் கைத்தொழில் துறையில் ஒரு மெட்ரிக் தொன் தேயிலை செயற்பாட்டு அலகாக எடுத்துக்கொள்ளப்பட்ட அதே வேளை ஒரு மெட்ரிக் தொன் உலர் இறப்பர் உள்ளடக்கப் பொருட்களும் (DRC)  செயற்பாட்டு அலகாக எடுத்துக்கொள்ளப்பட்டது. CO2, CH4 & N2O என்பன பச்சை வீட்டு வாயுக்களாக கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த காலல்களும் ஒவ்வொருபடிமுறைக்கான சக்தியும் தனித்தனியாக கணக்கிடப்பட்டதுடன் ஒவ்வொரு வாயுவுக்கும் அவை CO2 இற்து சமமான (CO2e)  ஆக புவி வெப்பவியல் அளவை (Global Warming Potential (GWP)அதாவது யாதாயினும் ஓர் பச்சை வீட்டு வாயு உறிஞ்சும் வெப்பத்தினை அதே திணிவு CO2 உறிஞ்சும் வெப்பத்தின் மடங்காக CO2 இன் GWP= 1) முலம் மாற்றப்பட்டன. மரநடுகை மண்ணிற்த்துவிடப்படும் காபன் பங்கு உயிர்த்pணிவு காபன் வரிசைப்படுத்தல் பிரதான GHG முடிவிடங்களாகும்.

தேயிலை பயிர்செய்கையிலிருந்து பெற்றுக்கொண்ட முடிவுகளில் பின்வருவன குறிப்பிடத்தக்கவை

Figure 1: GHG Emissions associated with energy use from different phases in tea production

  • சக்தியுடன் தொடர்புபட்ட அதிக பச்சை வீட்டு காலல் பச்சை தேயிலை பதப்படுத்தலில் நடைபெறும்
  • எல்லா பிரதேசங்களையும் கருதனால் அதிக மற்றும் குறைவான பச்சை வீட்டு வாயுக்காலல் அதிகம் வளர்ந்த மற்றும் குறைவாக வளர்ந்த பிரதேசங்களினால் ஏற்படுகின்றன
  • கொள்வனவு செய்யப்பட்ட மின்சாரமே பிரதான சக்தி முதல் அது 63% காலலுக்கு காரணமாகிறது.

இறப்பர் பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய பச்சை வீட்டு வாயு வெளிப்பாடானது (GHG) இறப்பர் பயிர்ச்செய்கை மற்றும் இறப்பர் மூலப்பொருள் தயாரிப்பு என்பவற்றிலும் பார்க்க அதிகமாகனளவு பெறுமதி சேர் இறப்பர் உற்பத்திப்பொருட்களின் தயாரிப்பின் போது வெளிவிடப்படுகின்றது.

தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் பிரிவுகளில் ஆரம்பநிலையில் இருந்து இறுதி செயற்பாடு வரை அனைத்து நான்கு வகையான உற்பத்திப் பொருட்களுக்குமான (தேயிலை தயாரிப்பு,க்ரீப் இறப்பர்; (crepe rubber) இறப்பர் பால் தொடர்பான உற்பத்திப் பொருட்கள்இ உலர் இறப்பர் தொடர்பான உற்பத்திப் பொருட்கள்) சக்திவளங்களின் பயன்பாடு காரணமான பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்வு பற்றி ஒரு ஒப்பீட்டினை கீழே காணலாம். இவ்விரு கைத்தொழில் துறைகளிலும் பெறுமதிசேர் இறப்பர் உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பின் போதே பச்சை வீட்டு வாயுக்களின் (GHG) உமிழ்வு அதிகளவிலானதாக காணப்படுகின்றது. மேலும் இவ்விரு கைத்தொழில் துறைகளிலும் மின்சாரமானது பச்சை வீட்டு வாயுக்களின் உமிழ்விற்கு பிரதான பங்களிக்கும் காரணியாக காணப்படுகின்றது.

Figure 2: Comparison of GHG Emissions associated with energy use of tea and rubber production

இந்த ஆய்வின் முலம் வெளிப்படும் மிக முக்கியமான முடிவு உயிர்த்திணிவு மற்றும் காபன் வரிசைப்படுத்தல் வீதம் இருதுறைகளிலும் சக்திக்காக வெளிவிடப்படும் பச்சைவீட்டு காலலை விட அதிகமாகும்இந்த முடிவுகள் எதிர்கால இலங்கையில் காயன் நடுநிலையான அல்லது காயனை குறைக்கும் தயாரிப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கவும் போட்டித்தன்மையான சந்தையில் அனுகூலம் பெறவும் உதவும்

மேலதிகமாகஇ இத்தொழற்துறைகளின் மூலம் வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களை குறைப்பதற்காக ஆராய்ச்சியாளர்களான டாக்டர். விதானகம மற்றும் பேராசிரியர் லொக்குபிட்டிய ஆகியோரின் பரிந்துரைதள் வருமாறு

  • சக்தி முகாமைத்துவப்படுத்தி வினைத்திறனுள்ள வகையில் பயன்படுத்துதல்.
  • தொழினுட்பத்தை மேம்படுத்தல்.
  • உற்பத்திச் செயன்முறைகளின் போது மீள்புதுப்பிக்கப்படக்கூடிய சக்திமுதல்களை பயன்படுத்தல்.

மிகமுக்கியமாக பின்வரும் உற்பத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்ளைகளை வரையறுக்க இந்த அறிக்கை அடித்தளமாக அமையும்

  • முன்புள்ள (தூய்மை மேம்படுத்தல் பொறிமுறை மற்றும் இலங்கை காபன் கடன் திட்டம் மற்றும் எதிர்கால காபன் சந்தை (பாரிஸ் உடன்படிக்கையின் 6 ஆவது கட்டுரையின் கீழ்{Clean Development Mechanism (CDM) and Sri Lanka Carbon Crediting Scheme (SLCCS)) and future carbon markets under Article 6 of the Paris Agreement}
  • தேசிய ரீதியான உறுதியான பங்களிப்புடன் காலல் இலக்கினைத்தீர்மானித்தல் (NDCs)
  • நடுகைத்தளங்களுக்கு காலல் பரிமாற்ற செயன்முறையை மேம்படுத்தல் (ETS)
  • சர்வதேசரீதியில் தணிக்கப்படும் விளைவுகளை மேம்படுத்தல்;(ITMOs)
  • சர்வதேச ரீதியாக அமைந்துள்ள வானிலை முதலீட்டு வாய்பு;புக்களை அணுகுவதன் முலம் புதிய வானிலை சார் தொழில்நுட்பங்களை கொண்டுவரல்.
  • GHG காலல் அளவுகோள்களை Nயிலை மற்றும் இறப்பருக்கு விதித்தல்
  • நடுகைத்தளங்களில் GHG காலல் மற்றும் குறைப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்தல் அறிக்கையிடல் உறுதிப்படுத்தல் (MRV).

இந்த சகாப்தத்தில் முழு உலகமுமே காலநிலையை பசுமையாக பேணிக்கொள்வதில் அவதானம் செலுத்திக்கொண்டிருக்கின்ற வேளையில் இந்த வகையான ஆராய்ச்சி முடிவுகள் இலங்கையின் விவசாய சார் ஏற்றுமதி பொருட்களினை மையமாகக் கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதுடன் உலகச் சந்தைகளில் சிறந்த இடத்தினை பெற்றுக் கொள்ளவும் வழி செய்கின்றன.

இந்த அறிக்கையாளர்கள் விலங்கியல் மற்றும் சூழலியல் விஞ்ஞானத்துறை விஞ்ஞானபீடம் , தேசிய ஆய்வு சபை, தேயிலை இறப்பர் ஆராய்ச்சி மையங்கள் தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் முகாமைத்துவம்  இனால ஆய்வு வெற்றிகரமாக முடிய வழங்கப்பட்ட மகத்தான ஒத்துழைப்பினை ஒப்புக்கொள்கிறோம்

Reference:

Vidanagama, J., & Lokupitiya, E. (2018). Energy usage and greenhouse gas emissions associated with tea and rubber manufacturing processes in Sri Lanka. Environmental Development, 26, 43–54. https://doi.org/10.1016/j.envdev.2018.03.006

For further information- https://www.sundaytimes.lk/211003/news/first-ever-study-to-gauge-the-carbon-footprint-from-energy-use-in-tea-production-457186.html

Written by: Sorupan Nagarajan