Menu Close

நிலையான நீரில் இனம்பெருகும் ஆட்கொல்லி டெங்குவிற்கு எதிராக போராடுவோம் !!!

டெங்கு காய்ச்சல் உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி தீவிரமாகப் பரவி வருவதால் தற்போதைய நாட்களில் அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஃபிளவிவிரிடே (Flaviviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஃபிளவிவைரஸ் (Flavivirus) இனத்தைச் சேர்ந்த டெங்கு வைரஸ், ஆர்த்ரோபாட் மூலம் பரவும் வைரஸாகும், இதில் நான்கு வெவ்வேறு செரோடைப்கள் (DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4) அடங்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) டெங்குவை வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் உலகளாவிய பொது சுகாதார சவாலாக கருதுகிறது. அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 390 மில்லியன் டெங்கு வைரஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. அதில் 96 மில்லியன் தொற்றுக்கள் மருத்துவ ரீதியாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த தொற்றானது 128 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியதோடு 3.9 பில்லியன் மக்கள் மிகுந்த சவாலை எதிர் நோக்குகின்றனர். அவற்றிலே அண்ணளவாக 70% ஆன பதிவுகள் ஆசியாவிலே காணப்படுகின்றன.

தற்சமயம் டெங்கு, இலங்கையில் பரவும் மிக முக்கியமான தொற்று நோயாக உருவாகி, மீள் எழுச்சியடைந்து வருவதுடன், அது பாரிய பொருளாதார மற்றும் சமூகச் சுமைகளுக்கும் வழிவகுத்துள்ளது என்பது சிலருக்குத் தெரியாது. காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அதிகப்படியான மழைவீழ்ச்சியினால் டெங்கு காவியான நுளம்புகள் இனம் பெருகுவதற்கு ஏற்ற சூழல் உருவாவது மட்டுமல்லாமல் அவற்றின் விருத்திக்கு ஏதுவான ஈரப்பதன் மற்றும் வெப்பநிலை போன்ற சாதகமான நிலைமைகளும் அதிகரிக்கின்றன.

இதுவரையில் டெங்குவிற்கான மருந்தோ குறிப்பிட தடுப்பூசிகளோ செயற்படுத்தப் படாததால் எமது நாட்டிலே நோய் பரவலை கட்டுப்படுத்த மிக சிறந்த வழி " நோய் காவியை கட்டுப்படுத்தல்" ஆகும். நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட உட்புற பூச்சி கொல்லிகளை தெளித்தல் , மற்றும் பூச்சி கொல்லி பயன்படுத்தப்பட்ட தடுப்பு வலைகளைப் பயன்படுத்தல் போன்ற இரசாயன தடுப்பு நடவடிக்கைகள் பெரிதளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையிலே காவிகளைத் தடுக்கும் வழிகளிலே இறுதி தெரிவாக கொண்டுசெல்லக்கூடிய அல்லது வண்டிகளிலே பொருத்தப்பட்ட மூடுபனி பிறப்பாக்கிகள் மூலம் “வெப்ப மூடுபனி" ஐப் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறெனினும் இந்த வைரஸ் இற்கான பயனுள்ள மருந்து வகைகளோ தடுப்பூசிகளோ இல்லாத காரணத்தினால் டெங்கு அச்சுறுத்தலானது மீண்டும் மீண்டும் ஏற்படுவது மட்டுமல்லாமல் அதனைத் தடுப்பதும் பாரிய சவாலாக உள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அதிக அபாயம் உள்ள இடங்களின் இடர் அதிகமாக உள்ள பகுதிகளை திறம்பட கண்காணிப்பதன் தேவை கடந்த ஆண்டுகளில் பெரிய அளவில் இருந்தது. சமீபத்தில் அர்ப்பணிப்பான விஞ்ஞானிகளின் குழுவொன்றினால் மூலக்கூற்று உயிரியல் அலகு, விஞ்ஞான பீடம், ராகம இல் வைத்து “புவியியல் தகவல் அமைப்பை பயன்படுத்தி டெங்கு அபாயம் உள்ள பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதற்கான தற்காலிக அணுகுமுறை" எனும் ஆய்வின் மூலம் இதற்கான சாதகமான தீர்வினை உருவாக்க முடிந்தது.

இந்த வெளியீடு மாசி 18, 2021 அன்று “நேச்சர் ப்ரீஃபிங்" இல் வெளியிடப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் சிறந்த சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை வெளியிடும் உலகின் முன்னணி அறிவியல் இதழ்களில் ஒன்றாகும். கீழே குறிப்பிடப்பட்ட ஆசிரியர்கள் இந்த கண்டுபிடிப்பை வழங்குவதில் வெற்றியடைந்துள்ளனர்.

Dr.சமீர D. விஸ்வகுல

புள்ளிவிபர திணைக்களம், விஞ்ஞான பீடம்,           கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு 07, இலங்கை.

Dr. கயன் P. விதானகே

ஆராய்ச்சி விஞ்ஞானி, இலங்கை உயிர்த் தொழில்நுட்பவியல் நிறுவனம்.

Mr. மலிக்க குணவர்த்தன

விஞ்ஞான முதுகலை நிறுவனம்,                     பேராதனை பல்கலைக்கழகம், பெரதெனியா, இலங்கை.

Mr. கிரிஷாந்த சமரவீர

தொற்றுநோயியல் பிரிவு, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,                கம்பஹா, இலங்கை.

Prof. நில்மினி S. குணவர்த்தன

மூலக்கூற்று மருத்துவப் பிரிவு, மருத்துவ பீடம்,                      களனி பல்கலைக்கழகம், ராகம, இலங்கை.

Prof. மேனகா D. ஹப்புகொட

மூலக்கூற்று மருத்துவப் பிரிவு, மருத்துவ பீடம்,                      களனி பல்கலைக்கழகம், ராகம, இலங்கை.

10 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் டெங்கு நோயின் இரண்டாவது அதிகூடிய பரவலாக மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 186,101 ஆகக் காணப்பட்டது. இது 2017 ஆம் ஆண்டில் பதிவான அதிகூடிய டெங்கு நிகழ்வாகும்.

டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அபாயம் உள்ள இடங்களை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய ஜிஐஎஸ் அடிப்படையிலான இடர் முன்கணிப்பு மாதிரிகள் தற்போதைய காலத்தின் தேவை ஆகும். இருப்பினும் அவை குறிக்கப்பட்ட மாவட்டத்திற்கோ அல்லது எமது நாட்டிற்கோ கிடைக்கவில்லை. எனவே டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அதிக அபாயம் உள்ள இடர் கூடிய இடங்களை அடையாளம் காண ஜிஐஎஸ் அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்க டெங்கு பாதிப்பு மற்றும் பருவகால விநியோகத்தைப் பகுப்பாய்வு செய்வதில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகின்றது. புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான இடர் மாதிரிகள் இந்த ஆய்வின் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.அவர்கள் கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆய்வுப்பகுதிகளில் அபாயமுள்ள பகுதிகள் மற்றும் காரணிகளை அடையாளம் காண தயாராக இருந்தார்கள்.டெங்கு நோயாளிகளின் இருப்பிடங்கள் மற்றும் ஏடிஸ் டெங்கு காவி நுளம்புகளின் இனப்பெருக்க கொள்கலன்கள், சாலைகள், பயன்பாட்டு நிலங்கள், கட்டடங்கள், பொது இடங்கள் மற்றும் ஒவ்வொரு ஆய்வு பகுதிகளிலும் உள்ள உயர்வான இடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் தனி அடுக்குகள் உருவாக்கப்பட்டன. இதன் திட்ட அமைப்பு கீழே உள்ள உருவில் விளக்கப்பட்டுள்ளது. (உரு 4). கேர்ணல் அடர்த்தி மற்றும் யூக்ளிடியன் தூர அடிப்படையிலான அணுகுமுறைகள் ஜிஐஎஸ் மாதிரியின் வளர்ச்சியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கேர்ணல் அடர்த்தி ஒரு மென்மையான குறுகலான மேற்பரப்பை புள்ளி அடுக்குகளுக்கு பொருத்தப் பயன்படுத்துவதோடு யூக்ளிடியன் தூரம் ஆனது பல்கோண அடுக்குகளின் நெருக்கமான வெளிப்பாடுகளை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்படும்.

உரு 4 – இடர் மாதிரி வளர்ச்சியின் முறையான பாய்ச்சற்படம்

உரு 5 – இடர் வரைபடங்கள்– Esri ArcGIS 10.21 ஐப் பயன்படுத்திப் பெறப்பட்டது. செயற்கைக்கோளின் பட ஒப்பீடுகள் இணைவளங்களான S1-S4 இல்  விளக்கப்பட்டுள்ளன.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் காண ஜிஐஎஸ் (GIS) அடிப்படையிலான இடர் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆய்வுப் பகுதிகளுக்குமான மாதிரியின் இறுதி விளைவுகளை உரு 5 காட்டுகின்றது.

அதிக ஆபத்து உள்ள இடங்கள் அடர் பச்சை நிறத்திலும், குறைந்த ஆபத்து உள்ள இடங்கள் வெள்ளை நிறத்திலும் விளக்கப்பட்டுள்ளன. மற்றொரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால், உருவாக்கப்பட்ட இடர் வரைபடங்களை செயற்கைக்கோள் படங்களுடன் ஒப்பிடும் போது, அனைத்து ஆய்வுப் பகுதிகளிலும் அதிக அபாயம் உள்ள இடங்கள் தாவரங்களால் சூழப்பட்டு இருந்தது. இதற்கான காரணம் டெங்குவை பரப்பும் நுளம்புகள் தாவரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் அதிகமாக வாழக்கூடியவையாக இருக்கலாம்.உரு 5, உரு 6 ஆகிய வரிப்படங்களை ஒப்பிடும் போது குறிப்பாக எரியவெட்டிய மற்றும் வலிகடமுல்ல ஆய்வுப் பகுதிகளில் அடர்த்திகளின் உள்ளூர்மயமாக்கல் வேறுபாடுகளை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பாய்ஸன் புள்ளி செயன்முறை மாதிரியிலிருந்து உருவாக்கப்பட்ட அடர்த்தி வரைபடங்களில் (உரு 6) அதிக அபாயம் உள்ள இடங்கள் மஞ்சள் நிறத்திலும் குறைந்த அபாயம் உள்ள இடங்கள் நீல நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளன. அடர்த்தி நிலைகளின் மாறுபாடு ஆய்வுப் பகுதிகளின் அடர்த்தி வரைபடங்களுக்கு அருகில் அளவிடப்பட்டுள்ளன.

  1. எரியவெட்டிய
  2. அக்பர் நகரம்
  3. 3 ஆம் குரானா
  4. வெலிகடமுல்ல

உரு 6 – அந்தந்த ஆய்வுப் பகுதிகளில் கணிக்கப்பட்ட டெங்கு பாதிப்புக்கான புள்ளி வடிவ அடர்த்தி

பாய்ஸன் புள்ளி வடிவ மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வுப் பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் இருப்பிடங்களின் கணித மாதிரியாக்கத்தின் போது ஆய்வுப் பகுதிகளில் டெங்கு பாதிப்புகளுக்கு வெவ்வேறு அடர்த்தியுள்ள புள்ளி வடிவம் கணிக்கப்பட்டது. எவ்வாறாயினும், எரியவெட்டிய ஆய்வுப் பிரதேசத்தில் அதிக தீவிரத்தன்மை வீச்சு காணப்பட்டது, அதே சமயம் 3வது குரானில் இருந்து குறைந்த அளவானது காணப்பட்டது.

உரு 7 – ஆய்வில் அவதானிக்கப்பட்ட பாய்சன் புள்ளி செயன்முறை மாதிரிகளுக்கான ரிப்லியின் கேசெயல்பாடுகள் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட  படங்கள்.

மேலே அவதானிக்கப்பட்ட ஆய்வுப் பகுதிகளுக்காக விருத்தி செய்யப்பட்ட பாய்ஸன் பன்முக மாதிரிகளின் ரிப்லியின்  K – நிகழ்ச்சிகளின் படி, எரியவெட்டிய மற்றும் 3 ஆம் குரான பகுதிகளில்  நிகழ்வுகள் சில அளவுகளில் கூட்டமாக காணப்பட்டதுடன் ஏனைய இடங்களுக்கு பரவியிருந்ததுடன் அக்பர் டவுண் மற்றும் வெலிகடமுல்ல பிரதேசங்களில் கூட்டமாக மட்டுமே அவதானிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, அவை திசை ஒருமிய (Isotropic) மற்றும் மொழிபெயர்ப்பு ஓரம் திருத்தும் (translation edge correction) முறைகளாகக்  கருதப்படுகின்றன, ஏனெனில் ஆய்வுப் பகுதிக்கு வெளியே கவனிக்கப்படாத நோயாளிகளின் இடங்களிலிருந்து எழும் ஓரவிளைவுகள் K-செயல்பாடுகளை மதிப்பிடும்போது தடைப்படலாம்.

உரு 8 – ஆய்வுப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்புகளின் பரவல்.இந்த உரு Esri ArcGIS 10.2.1 ஐப் பயன்படுத்திப் பெறப்பட்டது.

உரு 8 ஆனது வெவ்வேறு பருவமழை காலங்களில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் டெங்குப் பாதிப்புக்களின் பரவலை அடையாளம் காட்டுகிறது. மழைக்காலங்களில் டெங்கு பாதிப்புகளின் பரவலை பகுப்பாய்வு செய்யும் போது, அதிக மழைப்பொழிவு காரணமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது டெங்கு நுளம்புகளுக்கு இனம்பெருகுவதற்கு தேவையான கொள்கலன்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் அதன் வளர்ச்சிக்கு சாதகமான ஈரப்பதன் மற்றும் வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளையும் அதிகரிக்க வழி வகுக்கின்றது.

நாம் விவாதித்தபடி, இலங்கையானது பல வருடங்களாக டெங்கு நோய் பரவும் அபாயத்துடன் காணப்படுகின்றது. சரியான மருத்துவ முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும், அதிக அபாயம் உள்ள இடங்களை அடையாளம் காண்பது டெங்கு பாதிப்பின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே குறைக்க உதவும். எனவே இந்த அர்ப்பணிப்பான விஞ்ஞானிகள் குழுவினால்மாதிரி அடையாள செயன்முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை வழங்க முடிந்தது.இந்த உருவாக்கப்பட்ட மாதிரியின் விளைவுகளை அவர்கள் முன்வைப்பதன் மூலம், ஒரு பிரதேசத்தில் டெங்குவின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்கான ஆரம்ப எச்சரிக்கை கருவியாக இதனைப் பயன்படுத்தப்படலாம்.

அதுமட்டுமல்லாமல், பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இதனால் அவர்கள் நோய் பரவும் முறைகளை எளிதில் புரிந்து கொள்ள முடிவதோடு பொது சுகாதார வளங்களை திறம்பட ஒதுக்கவும் முடியும்.

மேலும், இந்த ஜிஐஎஸ்அடிப்படையிலான மாதிரியை  கணித மாதிரியாக்கம் மற்றும் மூலத்தொகுப்பியல் அணுகுமுறைகளுடன் இணைப்பதன் மூலம் அபாயகரமான பகுதிகளில் தற்போதைய சூழ்நிலையை நிகழ்நேரத்தில் விளக்குவதற்கு உருவாக்க முடியும்.

ஒரு கொலையாளியைத் தவிர்ப்பதற்காக , ஜிஐஎஸ்() அடிப்படையிலான மாதிரி நுட்பங்களைப் பயன்படுத்திய ஆராய்ச்சியின் மூலம் இந்த ஆர்வம் மிக்க குழுவால் ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வை வழங்கி இதற்கான  பதிலளிக்கப்பட்டது.

சான்றாதாரம் :- 

கயன் P. விதானகே, மலிக்க குணவர்தன, சமீர D. விஸ்வகுல, கிரிஷாந்த சமரவீர, நில்மினி குணவர்தன, மேனகா ஹப்புகொட (நிகழ்நிலையில் வெளியிடப்பட்டது : 18 மாசி 2021) 

புவியியல் தகவல் அமைப்பை (ஜிஐஎஸ்) பயன்படுத்தி டெங்கு ஆபத்து பகுதிகளில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதற்கான பல்வகை ஸ்பேடியோதற்காலிக அணுகுமுறை

Writer:-  Kenuja Pathmanathan